இந்த தமிழீழத் தேசிய அட்டை யாருக்காக?
தமிழீழ விடுதலையையும் தமிழீழத் தேசியத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய தேசிய அட்டை இது.
தேசியத் தலைவரால் தமிழீழ மக்களிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் தொடர் நிகழ்ச்சி இது.
தமிழீழத்தை நேசிக்கும் மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அவர்களின் பலத்தை உலகிற்கு நிரூபிக்கும் ஆவணம் இது.
இவ் அட்டைக்கு உரித்துடையவர் ஈழத் தமிழர் என்ற அடையாளம் கொண்டவர் என்பதையோ அல்லது அவர் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளுக்கமைய சுகந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைக்கும் போராட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பற்றுடனும் பொறுப்புடனும் ஆர்வத்துடனும் இணைந்து கொண்டவர் என்பதை ஏற்று வழங்கப்படும்.